Advertisment

எனக்குக் கடமைதான் முக்கியம்; குஜராத் தேர்தலில் நடந்த சுவாரஸ்யம்

lk

Advertisment

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில்காங்கிரஸ், பாஜகஎன இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. இம்முறைஆம் ஆத்மி களத்திற்கு வரவும்மும்முனைப் போட்டியாகத்தேர்தல் களம் சூடு பிடித்தது.

இதற்கிடையே இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே அமைதியாக நடைபெற்று வரும் தேர்தலில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இதில் சுவாரசிய சம்பவங்கள் காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை இளைஞர் ஒருவருக்குத்திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், வாக்குப்பதிவுக்குத்திருமணம் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காகத்திருமணத்தை மாலை நேரத்திற்கு ஒத்திவைத்துவிட்டு காலையில் மாப்பிள்ளை கோலத்தோடு வந்து வாக்குசெலுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

elections Gujarat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe