j

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. இம்முறைஆம் ஆத்மி களத்திற்கு வரவும்மும்முனைப் போட்டியாகத்தேர்தல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத்தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisment

இதற்கிடையே இன்று காலை முதற்கட்ட தேர்தல் தொடங்கி வாக்குப்பதிவுநடைபெற்று வருகிறது. காலை முதலே அமைதியாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவில்ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

Advertisment

இதில் சுவாரசியம் என்னவென்றால் இன்று காலையில் 100 வயது உடைய பாட்டி ஒருவர் வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்திருந்த நிலையில், தற்போது திருமணமான ஜோடி ஒன்று மணக்கோலத்தோடு தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.