Advertisment

குஜராத் தேர்தல்; வாக்கினை பதிவு செய்த மோடி

 Gujarat Election; Modi who registered his vote

குஜராத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவானது தொடங்கி இருக்கிறது. இன்று 93 தொகுதிகளில் நடக்கும் தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அகமதாபாத், காந்திநகர் ஆகிய முக்கியப் பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Advertisment

பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ளசபர்மதி தொகுதியில் வாக்களித்தார். பின்னர் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த பிரதமர் மோடி அங்கிருந்த மக்களை நோக்கி தான் வாக்களித்ததை குறிப்பிடும் வகையில் கையை உயர்த்தி காட்டினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறினார். இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் இளம் தலைமுறையினர் அதிகம் பங்கேற்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல் குஜராத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், காங்கிரசில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோர் இன்று வாக்களிக்க உள்ளனர். அதனால் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Gujarath
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe