vijay rupani

Advertisment

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. விஜய் ரூபானி முதல்வராக இருந்துவந்தார். இந்தநிலையில்இன்று (11.09.2021) விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை இராஜினாமாசெய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ரூபானி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சியை வலுப்படுத்தும்விதமாக பாஜக, விஜய் ரூபானியிடம்இருந்து முதல்வர் பொறுப்பை பறித்துள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.