ADVERTISEMENT

பிரதமரின் சகோதரர் மகளுக்கு சீட்... மறுத்த குஜராத் பாஜக!

01:00 PM Feb 06, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத்தில் வருகிற 21 ஆம் தேதி, மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 மாநகராட்சிகளில் நடைபெறவுள்ள தேர்தலில், அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட போடக்தேவ் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட சோனல் மோடி விண்ணப்பித்தார்.

சோனல் மோடி, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரஹலாத் மோடியின் மகள் என்பதும், குஜராத் நியாயவிலைக் கடைகள் சங்கத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குஜராத் பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில், சோனல் மோடியின் பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து குஜராத் பாஜக, பாஜக தலைவர்களின் உறவினர்களுக்கு சீட் வழங்கக்கூடாது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு சீட் வழங்கக்கூடாது என்ற கட்சியின் விதிமுறையின் கீழ், சோனல் மோடிக்கு சீட் மறுக்கப்பட்டதாக கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT