Advertisment

குஜராத் பாஜக முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல் வெற்றி

 Gujarat BJP CM candidate Bhupendra Patel

Advertisment

குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவினர் முன்னிலையில் உரை நிகழ்த்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜகவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் பாஜக முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல், தான் போட்டியிட்ட கட்லோடியா தொகுதியில் 58,529 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் இமாச்சலப்பிரதேசத்தில் சிராஜ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயராம் தாகூர் 33,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

elections Gujarath
இதையும் படியுங்கள்
Subscribe