Advertisment

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

Gujarat Assembly Election Date Notification

குஜராத் சட்டமன்றத்தேர்தலுக்கானதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

டெல்லியில் தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் அதிகாரிராஜீவ் குமார் குஜராத்சட்டமன்றத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் தற்போதைய அரசின் ஆயுட்காலம் பிப்ரவரி 18, 2023 உடன் முடிவடைகிறது. புதிய வாக்காளர்கள் 4.6 லட்சம் பேர் குஜராத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.தேர்தலுக்காக மொத்தம் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்றும் கூறினார்.

மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தலைஇரண்டு கட்டங்களாக நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியுள்ளார். டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில்இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

elections Gujarat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe