குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.அகமதாபாத் ரயில் நிலையத்துக்கு உடமைகளுடன் ஓடோடி வந்த பெண் பயணி ஒருவர், ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட நிலையிலும் ஏற முயன்றார்.
ஆனால் ரயில் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டனர். சிறிய காயங்களுடன் அந்த பெண் உயிர் தப்பினார். இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளது.