இருசக்கர வாகனத்திற்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு..? நிர்மலா சீதாராமன்

GST tax reduction for two wheelers ..? Nirmala Sitharaman

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நேற்று நடந்த இந்திய தொழில்துறை தலைவர்கள் கூட்டத்தில், இருசக்கர வாகனத்திற்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்க வாய்ப்புண்டுஎன்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போது இருசக்கர வாகனத்திற்கான வரி விகிதம் 28% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன், “இருசக்கர வாகனம் என்பது ஆடம்பர பொருளோ அல்லது போதை பொருளோ அல்ல இது பெரும்பாலன இந்திய நடுத்தர குடும்பத்தின் முக்கிய போக்குவரத்து சாதனம். அதனால், இதன் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தைக் குறைப்பது என்பது சிறந்த யோசனை” என்றார்.

மேலும் தற்போது முதல் கட்டமாக இருசக்கர வாகனத்திற்கான வரிவிகிதத்தையும் பிறகு நான்கு சக்கர வாகனத்திற்கான வரிவிகிதத்தையும் குறைக்க நேரிடலாம் என்றும் தெரிவித்தார்.

GST Nirmala Sitharaman Two wheeler
இதையும் படியுங்கள்
Subscribe