Skip to main content

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு உயருகிறது ஜிஎஸ்டி?

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

GST rises for online games

 

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்டி வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

எல்லாமே செல்போன் மயம் என்றாகிப்போன உலகில் உணவு, பல்பொருள் அங்காடி போன்ற பொருட்களை நொடியில் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட முடிகிறது. அதிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இன்றைய இளைஞர்களின் மோகம் அதிகமென்றே சொல்லலாம். இந்த நிலையில் ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சலில் உள்ள சில நிதியமைச்சர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரியை 28 சதவிகிதமாக உயர்த்த பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. விரைவில் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டுமல்லாமல் குதிரைப் பந்தயங்கள், சூதாட்ட வருமானங்களுக்கும் 28  சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி பதிவு முடக்கப்படும்” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Minister moorthy warns GST registration will be disabled if fake bill is produced

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (09-02-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

பாஸ்வேர்டு கொடுக்காததால் ஆத்திரம்; இளைஞரை கொன்று தீ வைத்து எரித்த கொடூரம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Friends who lost his lives youth for Anger at not being given a password

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபி தாஸ்(18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பாபி தாஸ், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த பாபி தாஸின் பெற்றொர், அந்த பகுதியை சுற்றி பல இடத்தில் தேடி வந்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் பாபி தாஸ் கிடைக்காததால், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், முர்ஷிதாபாத் பகுதி அருகே உள்ள வனப்பகுதியில், எரிந்த நிலையில் ஒரு மனித உடல் இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது, உயிரிழந்தது பாபி தாஸ் என்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பாபிதாஸின் நண்பர்களான 4 பேரிடம் இது குறித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், செல்போனில் விளையாடும் பிரி பையர் என்ற ஆன்லைன் விளையாட்டின் பாஸ்வேர்டை பாபி தாஸிடம், நண்பர்கள் 4 பேர் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மறுத்ததால் அவரை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.