“ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை” - பிரதமர் மோடி

“GST Joint action of Central and State Governments is required to increase the collection” - PM Modi

நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டமானது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல வகையான பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துகள், பருப்புகள் மற்றும் இதர விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படதாக கருதப்படுகிறது.

இந்தக் கூட்டத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், “பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையேற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல விஷயங்களில் நிதி ஆயோக் அமைப்பு எதுவும் செய்ய முடியவில்லை. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எனவே, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து என் எதிர்ப்பை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலம் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதியை குறைப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அதற்கான வாய்ப்புகளையும் அடையாளம் காண வேண்டும். உள்ளூர் பொருட்களை பயன்படுத்த மக்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

GST
இதையும் படியுங்கள்
Subscribe