47ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கியது. இரு தினங்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டுள்ளார்.
கேசினோ, குதிரைப்பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவிகிதம்வரை வரி விதிப்பது, மாநிலங்களுக்கு 2026ஆம் ஆண்டுவரை ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.