Published on 05/10/2020 | Edited on 05/10/2020

இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திதிற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடப்பாண்டு ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையான 20,000 கோடி இன்று நள்ளிரவுக்குள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி தொகையான 24 ஆயிரம் கோடி அடுத்த வார இறுதிக்குள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.