Skip to main content

'சப்பாத்தி, ரொட்டி லிஸ்டில் பரோட்டா வராதுங்க...'- காரணம் சொன்ன ஜிஎஸ்டி மேல்முறையீட்டு ஆணையம்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

The GST Appellate Authority has explained that 'parotta will not come in the form of chapati, roti...'

 

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியும், சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும் விதித்திருப்பது சரியானதுதான் என உறுதிப்படுத்தியுள்ளது ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்.

 

சப்பாத்தி, ரொட்டி ஆகிய உணவுகளுக்கு 5 சதவீதம் மட்டும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றான பரோட்டாவுக்கு 18% வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பை எதிர்த்து 'வாடிலால் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பரோட்டா தயாரிக்கும் நிறுவனம் குஜராத் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

 

இது தொடர்பாக அந்த ஆணையம் தெரிவித்துள்ள விளக்கத்தில், 'பேக் செய்யப்பட்டவர் உறைந்த பரோட்டாவவை ஒப்பிடுகையில் சப்பாத்தி, ரொட்டி போன்றவை வேறானவை. சப்பாத்தி பரோட்டா ஆகியவை தயாரிப்பதற்கு கோதுமை மாவு பொதுவான பொருளாக இருந்தாலும் பரோட்டாவில் வேறு சில பொருட்களும் சேர்க்கப்படுகிறது. பரோட்டாக்கள் மலபார், மிக்ஸ்டு வெஜிடபிள், ஆனியன், மேத்தி, ஆலு, லச்சா என பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது. மேலும் அவற்றில் எண்ணெய், உப்பு, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கொத்தமல்லி என பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே சப்பாத்தி, ரொட்டியை விட பரோட்டா என்பது வேறுபட்ட ஒன்றாக இருப்பதால் ஐந்து சதவீத வரி வரம்புக்குள் இருக்கும் சப்பாத்தி, ரொட்டி லிஸ்டில் பரோட்டாவை சேர்ப்பது என்பது தகுதியற்றது' என விளக்கம் அளித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

“ஜி.எஸ்.டி: வரி அல்ல… வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
GST Not a tax a waybust says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஜி.எஸ்.டி.: வரி அல்ல… வழிப்பறி’ எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டியைப் பார்த்து காப்பர் சிங் டேக்ஸ் (Gabbar Singh Tax) எனப் புலம்புகின்றனர்!. 

GST Not a tax a waybust says CM MK Stalin

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.