The GST Appellate Authority has explained that 'parotta will not come in the form of chapati, roti...'

Advertisment

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியும், சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும் விதித்திருப்பது சரியானதுதான் என உறுதிப்படுத்தியுள்ளது ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்.

சப்பாத்தி, ரொட்டி ஆகிய உணவுகளுக்கு 5 சதவீதம் மட்டும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம், கேரளம்ஆகிய பகுதிகளில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றான பரோட்டாவுக்கு 18% வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பை எதிர்த்து 'வாடிலால் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பரோட்டா தயாரிக்கும் நிறுவனம் குஜராத் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இது தொடர்பாக அந்த ஆணையம் தெரிவித்துள்ள விளக்கத்தில்,'பேக் செய்யப்பட்டவர் உறைந்த பரோட்டாவவை ஒப்பிடுகையில் சப்பாத்தி, ரொட்டி போன்றவை வேறானவை. சப்பாத்தி பரோட்டா ஆகியவை தயாரிப்பதற்கு கோதுமை மாவு பொதுவான பொருளாக இருந்தாலும் பரோட்டாவில் வேறு சில பொருட்களும்சேர்க்கப்படுகிறது. பரோட்டாக்கள் மலபார், மிக்ஸ்டு வெஜிடபிள், ஆனியன், மேத்தி, ஆலு, லச்சா என பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது. மேலும் அவற்றில் எண்ணெய், உப்பு, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கொத்தமல்லி என பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே சப்பாத்தி, ரொட்டியை விட பரோட்டா என்பது வேறுபட்ட ஒன்றாக இருப்பதால் ஐந்து சதவீத வரி வரம்புக்குள் இருக்கும் சப்பாத்தி, ரொட்டி லிஸ்டில் பரோட்டாவை சேர்ப்பது என்பது தகுதியற்றது' என விளக்கம் அளித்துள்ளது.