Skip to main content

விண்ணுக்கு ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்....

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
rocket


இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக் 3 என்ற ராக்கெட் இன்று மாலை 5மணி 8 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. கஜா புயல் தீவிரம் அடைந்தால் மட்டும் விண்ணுக்கு அனுப்பும் நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்திருந்தார்.
 

கஜா புயல் தீவிரம் அடையாததை அடுத்து, சொன்ன கால நேரத்திற்கு சரியாக ஜிஎஸ்எல்வி மாக் 3 என்ற ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
 

இந்த ராக்கெட் அதிக எடை கொண்ட செய்ற்கைகோளை கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.  3423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளை ஜிசாட் 29ஐ, மாக் 3 ராக்கெட் சுமந்து செல்ல இருக்கிறது. 
 

 

சார்ந்த செய்திகள்