Skip to main content

விஷம் குடித்து மணமகன் உயிரிழப்பு, மணமகள் கவலைக்கிடம்; திருமணத்தன்று நடந்த சோகம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Groom passed away after consuming poison on wedding day, bride worried in hospital

 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் திருமண நாளன்று மணமகன் மற்றும் மணமகள் இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மணமக்களுக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் திருமண தினத்தன்று மணமகன் விஷம் குடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து  மணமகளும் விஷம் குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மணமகன் உயிரிழந்தார். மணமகள் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார். 

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்ததில், திருமணம் நடப்பதற்கு முன்பாக கடந்த பல நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகள் மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னுடைய தொழில் காரணமாக திருமணம் இப்போது வேண்டாம் என்று கூறி மணமகன் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளார். 

 

இதனால் அதிருப்தியான மணமகள் போலீஸ் புகார் தெரிவிக்கவே, மணமகன் உடனடியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் மணமகன் விஷம் குடித்துள்ளார். இதனை மணமகன் மணமகளிடம் கூற, அவரும் விஷம் குடித்துள்ளார் என்பது தெரியவந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணீர் மல்க ஆதங்கப்பட்ட பட்டியலின பெண்; ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்திற்கு நுழைந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், புந்தேல்கண்டி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள பட்டியலின பெண்களிடம் உரையாடினார். அது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பட்டியலின பெண் ஒருவர், ‘எங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். செருப்பு அணிந்து நாங்கள் கிராமத்திற்கு நுழைந்தால் எங்களை கெட்ட சகுணம் என கூறுவார்கள். செருப்பு அணிந்து ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்? என கேட்பார்கள். தண்ணீர் இறைக்க கிணற்றுக்குள் சென்றால், மணிக்கணக்கில் காத்திருக்கச் சொல்வார்கள். தூரமாகச் சென்று உட்காரு என துரத்துவார்கள். எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள்’ என்று கூறிய உடனே, ‘யார் உங்களை இப்படிச் செய்கிறார்கள்?’ என ராகுல் காந்தி அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த பெண், ‘உயர்சாதியைச் சேர்ந்த மக்கள்தான். பிராமணர்கள், தாக்கூர், அகிர் சமூகத்தினர். எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள். 

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

திருமணத்திற்கு அழைப்பார்கள். ஆனால், குப்பை தொட்டி அருகே எங்களை அமரச் சொல்வார்கள். இல்லையென்றால், கால்வாய் அருகே அமர வைப்பார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது?. எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது. இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கிக்கொண்டோம். ஆனால், எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. இது சுதந்திர நாடு எனச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும், மிகவும் சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன். இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன்’ என்ற கூறி தனது செருப்பை கையிலேயே வைத்திருந்தார்.

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

உடனடியாக ராகுல் காந்தி, அந்த பெண் கையில் வைத்துக்கொண்டிருந்த செருப்பை வாங்கி, ‘நீங்கள் அணிந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி அந்த பெண்ணுக்கு செருப்பை போட்டுவிட்டார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள், கைகளை தட்டி வரவேற்றனர். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.  

Next Story

ம.பி. தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Terrible fire accident in Madhya Pradesh Secretariat

மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று (09-03-24) இந்த தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் திடீரென தீ பற்றியது. இங்கு பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கி அந்த இடமே புகை மண்டலமானது.

இந்த தீ விபத்து தொடர்பாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.