Advertisment

மாலையில் திருமணம், காலையில் மரணம்... கைபேசியால் நேர்ந்த கொடுமை!

groom

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நாடோசி கிராமத்தைச்சேர்ந்த 30 வயதான இன்ஜினியர் நரேஷ் பால் காங்வார் இன்று காலை ரயில் தண்டவாளத்தைக்கடக்கும் பொழுது இரயில் மோதி உயிரிழந்தார். இதில் சோகமான செய்தி என்னவென்றால் இவருக்கு மாலை திருமணம் நடக்கவிருந்தது. காலை ஒன்பது மணியளவில் காங்வார் இரண்டு போன்களை வைத்துக்கொண்டு ஒன்றில் பேசிக்கொண்டும், மற்றொன்றில் மெசேஜ்கள் அனுப்பிகொண்டும் வந்தவர் அத்தருணத்தில் வந்த ராஜ்யா ராணி விரைவு இரயில் வண்டி வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தைக்கடக்க முற்படும்பொழுது இரயில் மோதி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இது அவரின் குடும்பத்தாருக்கும், அவரை திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணிற்கும் மிகப்பெரிய சோகத்தைஅளித்துள்ளது. இது குறித்து பரேலி துணை ஆய்வாளர் கூறுகையில் காங்வார் "உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காகக்காத்திருக்கிறோம்" என்று கூறினார். காங்வாரின் வாழ்க்கை கைபேசியால் பரிதாபமாக தொலைந்தது.

Advertisment

death groom sad accidents
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe