
போதைப் பொருள் வாங்க பணம் தராத தாத்தா மற்றும் பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்கேகாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் அக்மல். அக்மல் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்ட நிலையில் அக்மலை சின்ன வயதிலிருந்து அவருடைய தாத்தா அப்துல், பாட்டியான ஜமீலா ஆகியோர் வளர்த்து வந்தனர். கடந்த 28 ஆண்டுகளாக பேரன் அக்மலை இவர்கள் வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் போதை பழக்கங்களுக்கு அடிமையான அக்மல் அவ்வப்போது பணம் கேட்டு தாத்தா பாட்டியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் போதைப் பொருளுக்காக ஒருநாள் உங்களை கூட கொலை செய்யலாம் எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று போதைப் பொருட்கள் வாங்குவதற்கு பணம் கேட்டு அக்மல் தாத்தா பாட்டியை தொல்லை செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தாத்தா அப்துல் கழுத்தையும், பாட்டி ஜமீலா கழுத்தையும் அறுத்துக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவாகி விட்டான். தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் அக்மலை கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)