Advertisment

காலி பணியிடங்களை அதிகரிக்கக்கோரி பட்டதாரிகள் பேரணி

Graduates rally to increase vacancies

புதுச்சேரி அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரிகள் அமைதி பேரணி நடத்தப்பட்டது.

Advertisment

புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 116 எல்.டி.சி. யூ.டி.சி காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு தற்பொழுது எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. 116 காலி பணியிடங்களுக்கு சுமார் 50,000 பேர் தற்போது வரை விண்ணப்பித்துத்தேர்வு எழுத உள்ளனர்.

Advertisment

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள், புதுச்சேரி அரசுத்துறைகளில் உள்ள உதவியாளருக்கான அறிவிப்பை வெகு விரைவில் வெளியிட வேண்டும், மேல்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை எழுத்தர் தேர்வுகளுக்கு காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி பேரணி மேற்கொண்டனர். பேரணியானது, சுதேசி மில் அருகே இருந்து புறப்பட்டு அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, வழியாக சட்டமன்ற முன்பு வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe