Advertisment

"கேரளாவை ஆம்புலன்ஸில் தூக்கி செல்லும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சசி தரூர் விமர்சனம்!

shashi tharoor

Advertisment

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் கரோனாபரவல் அதிகமாகஇருந்துவருகிறது. கடந்த 24ஆம் தேதி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதியானது.

அதனைத்தொடர்ந்து நேற்று (25.08.2021)ஒரேநாளில்31,445 பேருக்குப் புதிதாக கரோனாபாதிப்பு உறுதியானது. கேரளாவில் ஓணம் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு அண்மையில் கரோனா கட்டுப்பாடுகளில்தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகளாலேயே கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துவருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்தநிலையில்,கேரள அரசு கரோனாவைசரியாக கையாளவில்லை என கூறிஇளைஞர் காங்கிரஸார், அம்மாநில தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், கரோனாபரவலால் கேரளா ஐசியுவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகஅவர், "இது, கேரளாஐசியுவில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நடைபெறும் அடையாள போராட்டம். அதனை (கேரளாவை) ஆம்புலன்சில் தூக்கிச் செல்வதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

corona virus Kerala shashi tharoor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe