Advertisment

ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் சந்திப்பு...

 Governor of Tamil Nadu meets Rajnath Singh ...

Advertisment

டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைத்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (23/10/2021) இரவு நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், நிலுவையில் உள்ள நீட் தேர்வு விலக்கு அளிக்கக்கோரும் மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர், பிரதமருடன் ஆலோசித்ததாகத் தகவல் கூறுகின்றன. இச்சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டின் நலனுக்கான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி, உறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றபின்பு முதன்முறையாக நேற்றுபிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த நிலையில், இன்று டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர்சந்திப்பு மேற்கொண்டார்.

Delhi tamilnadu governor Rajnath singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe