கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகபொதுமுடக்கம்அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியில் மதுபானங்கள் விற்க அனுமதி அளித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் காரணமாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் உள்ள சிக்கல் தற்போது தீர்ந்துள்ளது. தற்பொழுது புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்ததால் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.