GOVERNOR BANWARILAL PUROHIT MEET PRESIDENT AT DELHI

Advertisment

தமிழ்நாடுஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமான சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தலைநகர் டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (08/09/2021) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.