style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
இனிபீஹாரில் உள்ளஎல்லாகாப்பகங்களையும்பீஹார்அரசே எடுத்துநடத்தும் என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீஹாரில் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சுமார் 7 வயதுமுதல் 17 வயதுடைய 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காப்பக ஊழியர்கள், அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 10-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரைபோலீசார் தேடிவருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவரை காணவில்லை என தெரிந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஊழியரால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட அந்தசிறுமி காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஜெ.சி.பி இயந்திரத்துடன் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணியில் இறங்கினர். முதல்கட்டத்தில்மீட்கப்ட்ட 21 சிறுமிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில்16 சிறுமிகள் பாலியல் கொடுமை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டிருந்தது.
நாட்டையே உலுக்கிய இந்தசம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மொத்தம் இருதுவரை 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக6 பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் ஏற்கனவேகைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியானபிரிஜேஷ் தாக்கர்எனும் கொடூரனை அண்மையில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வாய்த்திறக்காதிருந்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இதுபற்றி கூறுகையில், பீஹாரிலுள்ள அனைத்து காப்பகங்களையும் அரசே ஏற்று நடத்தும், இனி அரசு சாரா நிறுவனங்கள் காப்பகங்களை நடத்த முடியாது.முஸாபர்பூர் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.