amitshah

Advertisment

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்துஅங்கு தீவிரத் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில்இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கோவில் தொடர்பான பிரச்சனைகளில் அரசு தலையிடக்கூடாது எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாகஅவர், "சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கேரளா கருதப்பட்ட காலம் இருந்தது. இது அதிகம் படித்த, அமைதி நேசிக்கும் மாநிலமாக அறியப்பட்டது. இப்போது இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுகள் கேரளாவை ஊழலின் மையமாக ஆக்கியுள்ளன.கோவில்கள் தொடர்பான பிரச்சினைகளில் அரசுகள் தலையிடக்கூடாது என பாஜக நம்புகிறது. அதனை, பக்தர்களிடமே விட்டுவிடவேண்டும். போலீஸ் உடையணிந்த கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், சபரிமலை பக்தர்களைத் தவறாக நடத்தினர்" எனக் கூறினார்.