Advertisment

'சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு வாபஸ்' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Interest rates of small savings schemes government order withdraw union finance minister

Advertisment

வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், பிபிஎஃப் (PPF), KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கானவட்டியைக் குறைப்பதாக நேற்று (31/03/2021) நிதியமைச்சகம்அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2020 - 2021 நிதியாண்டின் கடைசி காலாண்டில் உள்ள சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடரும். வட்டி குறைப்பு தொடர்பாக நேற்று (31/03/2021) வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Interest rates of small savings schemes government order withdraw union finance minister

Advertisment

அதன்படி, வங்கி சேமிப்பு வட்டி விகிதம் 4.0% ஆகவும், ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு கால வைப்பு நிதி வட்டி விகிதம் 5.5% ஆகவும், ஐந்து ஆண்டு கால வைப்பு நிதி வட்டி விகிதம் 6.7% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.4% ஆகவும், பிபிஎஃப் (Public Provident Fund Scheme) வட்டி விகிதம் 7.1% ஆகவும் தொடருகிறது.

finance minister interest rates Nirmala Sitharaman twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe