பொங்கல் விடுமுறை அறிவித்த கேரள அரசு!

 Government of Kerala announces Pongal holiday!

தமிழகம் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் நிலையில் கேரளாவில் நாளை 6 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை முதல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, வயநாடு, பதனம்திட்டா, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்க வேண்டும்என தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.

முன்னதாக வரும் ஜனவரி 15 ஆம்தேதி விடுமுறை என கேரள அரசு அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது நாளை அதாவது 14 ஆம் தேதிகேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, வயநாடு, பதனம்திட்டா, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Kerala TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe