கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் 55,000 கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கிறது. இந்த கடனை அடைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்தது, ஆனால் அதனை வாங்க எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை. இந்நிலையில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களை விற்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனையும் வாங்க யாரும் முன்வராததால் தற்பொழுது மத்திய அரசே ஏர் இந்தியா நிறுவனத்தில் 2300 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியாவின் சொத்துக்களை விற்க முடியாததால் மத்திய அரசு புதிய முடிவு
Advertisment