மஹாராஷ்டிரா மாநிலம் நந்தீத் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், காலில் மாவு கட்டு போட்டிருக்கும் பெண்ணை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் இல்லாத காரணத்தால் அந்த பெண்ணின் உறவினர்கள் போர்வை ஒன்றை அவர் உடம்புடன் கட்டி தரையில் தரதரவென இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
இச்சம்பவம் குறித்துஅந்த மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர், டாக்டர் சந்திரகாந்த் மாஸ்கேதெரிவிக்கையில்," இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தினோம், அலுவலர்கள் ஸ்ட்ரெச்சர் வரும்வரை காத்திருக்க சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் காத்திருக்காமல், அழைத்து சென்றுவிட்டனர். இதை பற்றி எந்த புகாரும் அவர்களிடம் இருந்துவரவில்லை" என்கிறார்.
நந்தீத் என்ற நகரம் இந்தியாவிலேயே 8 ஆவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இது போன்றசம்பவங்கள் மலைவாழ் மக்கள் வாழும்பல கிராமங்களில் நடைபெற்றிருக்கிறது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">