சட்டப்பேரவை அருகே அரசு ஊழியர்கள் தர்ணா!

Government employees struggle demanding  re-implementation old pension scheme.

புதுச்சேரியில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி சட்டப்பேரவை அருகே அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தைக் கைவிட்டுப் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், புதுச்சேரி நிதி நெருக்கடிக்குக் காரணமான தனிக்கணக்கைத்திரும்பப் பெறவேண்டும், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நேரடியாகச் சம்பளம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான வேலையைத்துரிதப்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியச் சலுகைகளை புதுச்சேரியில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் சட்டப்பேரவை அருகே தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் மத்திய கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் விஜயகுமார், பாக்கியவதி பத்ரீஸ், செந்தில் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.

Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe