குஜராத் மாநிலத்த்தில் சர்தார் சரோவர் புனர்வாழ்வு திட்ட அலுவலகத்தில் அரசு பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் ரமேஷ் சந்திரஃபிஃபார் (50). இவர் கடந்த எட்டு மாதங்களில் பதினாறு நாட்கள் மட்டும் அலுவலகத்துக்குவந்ததால் ரமேஷிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் திரும்பி அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பது...

Advertisment

iam kalki avatar

"நான் விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம். நீங்கள் இதனை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் உங்கள் இஷ்டம். ஆனால் இதனை நான் நம்புகிறேன். 2010ஆம் ஆண்டு நம் அலுவலகத்தில் இருக்கும்பொழுதுநான் கல்கியின் அவதாரம் என்று உணர்ந்தேன். எனக்கு அற்புத சக்திகளெல்லாம் உள்ளது. தற்போது நான் நாட்டில் உள்ள வறட்சியைப் போக்க தியானங்கள் இருந்து வருகின்றேன். இதுபோல் மக்களின் மனசாட்சியை தூய்மைப்படுத்தவும் தியானங்கள், யாகங்கள் என்று வீட்டிலிருந்தபடியே செய்து வருகின்றேன். இதனையெல்லாம் அலுவலகத்திற்கு வந்தால் என்னால் செய்ய இயலாது" என்று கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Advertisment