பத்தாம் வகுப்பிற்கான தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பதினோராம் வகுப்புக்கான சேர்க்கை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த நெறிமுறைகளை அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த நெறிமுறைகளின்படி பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக 15 சதவீத சேர்க்கைகளை பள்ளிகள் அனுமதிக்கலாம் என்றும், மாணவர்கள் விருப்பப்படி பாட தேர்வினை செய்யலாம் என்றும், ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து பள்ளிகள் இந்த நெறி முறைகளை பின்பற்றலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.