Skip to main content

இந்திய படகுகள் விடுவிக்கப்படும்- கோத்தபய ராஜபக்சே....

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் 7-வது அதிபராக பதவி ஏற்றார். அதனையடுத்து இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டார்.

 

gotabaya rajapakse in delhi

 

 

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வந்தார். இந்திய குடியரசு மாளிகையில் அவரை பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வரவேற்றனர். வருகை தந்த கோத்தபய ராஜபக்சேவிற்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையை கொடுக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இருவரும் கலந்துரையாடினர். அதன்பின் பேசிய கோத்தபய ராஜபக்சே, "நாங்கள் (பிரதமர் மோடி மற்றும் ராஜபக்சே) மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தோம். எங்கள் காவலில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான படகுகளை  விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராஜபக்சேவை வெற்றிபெறச் செய்யவே தொடர் குண்டுவெடிப்பு” - வெளியான பரபரப்பு தகவல்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Shocking information about the Easter incident in Sri Lanka

 

இலங்கையில் கோத்தபய ராஜபக்சோவை வெற்றிபெற வைக்கவே தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 269 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாகக் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 

 

இந்த நிலையில், குண்டு வெடிப்பின் மூலம் இலங்கையில் பதற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் கோத்தபய ராஜபக்சேவை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதே நோக்கம் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய ஆசாத் மவுலானா என்பவர் சேனல் 4 என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் இந்த குண்டு வெடிப்புக்கு இலங்கை உளவுத்துறையே காரணம் எனவும் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து உளவுத்துறை காரணமா? என்பது குறித்து விசாரிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

Next Story

"பிரச்சனையைத் தீர்க்க முயன்றேன், ஆனால் முடியவில்லை.." - ராஜினாமா கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே தகவல்! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

"I made my own efforts to solve the problem" - Former President Gotabaya Rajapaksa in his resignation letter!

 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

 

இலங்கை நாடாளுமன்றம் இன்று (16/07/2022) கூடிய நிலையில், அதிபர் பதவியில் இருந்து விலகும் கோத்தபய ராஜபக்சேவின் கடிதத்தை நாடாளுமன்றச் செயலாளர் தம்மிகா தசநாயகே வாசித்தார். நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தன்னால் முடிந்த பணிகளை செய்ததாகவும், எனினும் சூழல் கருதி பதவி விலகுவதாகவும் கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். 

 

கடிதத்தை வசித்த செயலாளர், இதன் மூலம் அதிபர் பதவி காலியாக இருக்கிறது. வரும் ஜூலை 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்குள் அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கு மேல் விண்ணப்பித்தால் வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 

 

கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.