
கர்நாடகா மாநிலம் குருப்பூர் அருகே காரும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10க்கும் மேலாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகசாலை விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடுஉயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)