Advertisment

நாசாவின் அழைப்பை ஏற்க மறுத்த இந்திய மாணவர்

g

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி (வயது 19). ஏழை குடும்பத்தில் பிறந்த கோபால் அரசு பள்ளியில் படித்த போது புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழை இலை கழிவில் இருந்து வாழை உயிர் செல், காகித உயிர் செல், அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய கோபோனியம் அலாய் ஆகியவற்றை உருவாக்கி இருந்தார். வாழை மற்றும் காகித உயிர் கலங்களுக்கு காப்புரிமைகளை பெற்றுள்ளார். நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் போன்ற மற்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது முயற்சி பற்றி சொன்ன பின்னர், அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் அனுப்பப்பட்டார். இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்.

Advertisment

இதைத்தொடர்ந்து அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கோபால்ஜிக்கு அழைப்பு விடுத்தது. துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் அழைப்புவிடுத்தன. இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல், ‘இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe