Advertisment

முதலிடம் பிடித்த 2.0, அவென்ஜர்ஸ் , பிரியா வாரியார், ஃபீபா 2018; கூகுள் வெளியிட்ட பட்டியல்

goo

Advertisment

2018 ஆம் ஆண்டில் இந்தியஅளவில் அதிகம் தேடப்பட்டவை என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எப்பொழுதும் பாலிவுட் தொடர்பான விஷயங்களே முதலிடம் பிடிக்கும் நிலையில் இந்த வருடம் பாலிவுட்டை பின்னுக்கு தள்ளி ஃபீபா 2018 அதிகம் தேடப்பட்ட விஷயமாக மாறியுள்ளது. அதிகம் தேடப்பட்ட இந்தியதிரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் 2.0 படமும், அதிகம் தேடப்பட்ட ஹாலிவுட் படம் என்ற பெருமையை அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படமும் பெற்றுள்ளது.

அதிகம் தேடப்பட்ட சினிமா பிரபலங்களில் ஒரு அடார் லவ் திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகையான ப்ரியா வாரியார் முதலிடத்தில் உள்ளார். மேலும் கர்நாடகா தேர்தல் முடிவுகள், நிபா வைரஸ், சர்தார் வல்லபாய் படெல் ஒருமைப்பாடு சிலை, பிட்காயின் பிரைஸ், பட்ஜெட் 2018, மற்றும் செக்‌ஷன் 377 ஆகியவையும் அதிகம் தேடப்பட்டுள்ளன. ஃபீபா உலகக்கோப்பை 2018, லைவ் ஸ்கோர், ஐபிஎல் 2018 ஆகியவை டாப் 3 ட்ரெண்டிங்காக தேடலில் இருந்துள்ளது.

2.0 priya variyar avengers IPL top 100 google
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe