/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a71877.jpg)
கேரளாவில் காரில் பயணித்த சிலர் கூகுள் மேப்பை நம்பி பயணித்தபோது கார்ஆற்றில்புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஐந்து பேர் கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.தொடர்ந்துமூணாறில் இருந்து ஆலப்புழா செல்ல வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட அவர்கள் தங்கள் பயணித்த காரில் கூகுள் மேப் மூலம் ஆலப்புழா செல்வதற்கு பயணத்தை மேற்கொண்டனர். இரவு நேரத்தில் அவர்கள் பயணம் தொடர்ந்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் குருபந்தராகடவு என்னும் பகுதியில் உள்ள பாலத்தில் செல்ல வேண்டியதை கூகுள் மேப் பாலத்தை ஒட்டியுள்ள வழியில் செல்ல வேண்டும் காண்பித்ததால் குழம்பிய பெண்கள் கால்வாய்க்குள் காலை காரை செலுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. காரில் இருந்த ஓட்டுநர் உட்பட ஐந்து பேரும் பின்புற கதவு வழியாக தப்பித்தனர். இருப்பினும் கார் ஆற்றில் முழுமையாக மூழ்கியது. அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் தாங்கள் கூகுள் மேப்பை நம்பி வந்ததாகவும், தங்களுடைய கார் ஆற்றில் சிக்கிக் கொண்டதாகவும் உதவி கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊர்மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் அனைவரும் சேர்ந்து கிரேன் மூலம் கயிறு கட்டி காரை வெளியே எடுத்து வந்தனர்.இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)