Skip to main content

கூகுள் மேப் புதிய அப்டேட்...!

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

கூகுள் மேப் தனது செயலியில் புதிதாக அப்டேட்டை கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் உங்களுக்கு அருகாமையில் என்ன விஷயங்கள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

 

google map

 

கூகுள் மேப் இல்லாதவரையில் ஒரு ஊருக்கோ அல்லது இடத்திற்கோ செல்ல வேண்டுமென்றால், அந்த முகவரியை கண்டுபிடிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது சாலையில் தென்படும் யாரிடமாவது விசாரித்து பிறகு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது கூகுள் மேப் வந்த பிறகு நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரையிலும் துல்லியமாக உங்களுக்கு கூகுள் மேப் வழிகாட்டிவிடுகிறது. அதேபோல் கூகுள் நிறுவனமும் கூகுள் மேப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்களை கொண்டு வருகிறது.
 


அந்த வகையில் தற்போது புதிய அப்டேட்டை ஒன்றை கூகுள் மேப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கூகுள் மேப் செயலி அல்லது இணைய சேவையை நீங்கள் திறந்தால் அருகாமையிலிருக்கும் எட்டு இடங்களின் தேடல் வசதியை உங்கள் கூகுள் மேப் முகப்பு பக்கத்தில் காட்டும். இதற்குமுன் முகப்பு பக்கத்தில் ரெஸ்டாரன்ட்ஸ், காஃபி, பிரபல கட்டுமான பகுதிகள் மற்றும் கூடுதல் தேடல் ஆகிய நான்கு விஷயங்களை மட்டுமே காண்பிக்கும். 
 

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதியின் மூலம் ரெஸ்டாரன்ட்ஸ், காஃபி, பிரபல மையங்கள், பார்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள் மற்றும் கூடுதல் தேடல் என மொத்தம் 8 விஷயங்களை காண்பிக்கும். இந்த அப்டேட் தற்போதைக்கு கூகுள் மேப் சோதனை முயற்சியில் அந்நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. விரைவில் இது அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்