Advertisment

கரோனாவை பின்னுக்கு தள்ளிய ஐபிஎல் : 'அதிகம் தேடப்பட்டவை' பட்டியலை வெளியிட கூகுள்

ipl2020

Advertisment

கரோனாவால் ஒட்டுமொத்தமாகதிருப்பி போடப்பட்ட2020 ஆம் ஆண்டு, ஒரு வழியாகமுடிவுக்குவர இருக்கிறது. இந்தாண்டு முடிய இன்னும் 21 நாட்களேஉள்ள நிலையில் கூகுள்நிறுவனம், இந்தியாவில்இந்தாண்டுஅதிகமாக தேடப்பட்டநிகழ்வுகள், தேடப்பட்டபிரபலங்கள்எனசிலபட்டியல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகமாக தேடப்பட்டவை பட்டியலில், ஐபிஎல் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் இந்த கிரிக்கெட்திருவிழா, காரோனாவைரஸையேஇரண்டாம்இடத்திற்கு தள்ளியுள்ளது. அமெரிக்கதேர்தல் முடிவுகள், பிரதமரின்கிஷான்யோஜனாதிட்டம், பீகார்தேர்தல் முடிவுகள் ஆகியவைஅடுத்தடுத்த இடங்களைபிடித்துள்ளன.

இந்தியாவில் அதிகம் தேடப்பட்டபிரபலங்கள் பட்டியலில், அமெரிக்காவின் புதிய அதிபராகபதவியேற்கவுள்ள ஜோபைடன்முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம்இடத்தைஅர்னாப் கோஸ்வாமியும், அதற்கடுத்தடுத்த இடங்களை, கனிகாகபூர், வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன், நடிகர்அமிதாப்பச்சன் ஆகியோர்பிடித்துள்ளனர்.

Advertisment

மேலும், பன்னீர் எப்படி தயாரிப்பது, நோய்எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகப்படுத்துவது, டல்கோனாகாபிஎப்படி தயாரிப்பது, ஆதரோடுபான்கார்டைஇணைப்பதுஎப்படி, வீட்டில்சானிட்டைஸர் தயாரிப்பது எப்படிஉள்ளிட்டவை, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளாக உள்ளன.

corona virus google IPL
இதையும் படியுங்கள்
Subscribe