google

Advertisment

இந்திய நாட்டின் 72வது சுதந்திர தினத்தை கவுரவிக்கும் விதமாக இன்றைய கூகுள் டூடுல் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனைகள் மனிதர்களின் நினைவு தினம் என முக்கிய தினங்களில் அதனை கவுரவிக்கும் விதமாக கூகுளின் முகப்புப்பக்கங்களின் லோகோவினை தற்காலிகமாக மாற்றி அமைத்து வருகிறது கூகுள் நிறுவனம்.

அந்தவகையில், இந்திய நாட்டின் 72வது சுதந்திர தினத்தை கவுரவிக்கும் விதமாக இன்றைய கூகுள் டூடுல் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த டூடுலில் நமது நாட்டின் தேசிய விலங்கான புலி, யானை, தேசிய பறவையான மயில்கள், பின்னணியில் சூரிய உதயமும், அழகான மலர்கள் மலர்வதும் குறித்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டூடுல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.