
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது.
11 பேரையும் விடுதலை செய்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் குஜராத் அரசு விழாவில் விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தாகூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பான அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பகுதியின் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்த அரசு மேடையில் பாலியல் வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சைலேஷ் சிமெண்லால் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 11 பேரின்விடுதலையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
Follow Us