Advertisment

“பணக்காரனாக வாழ பலிகேட்ட கடவுள்” - டெல்லியில் பீகார் இளைஞர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்

publive-image

பணக்காரனாக வாழ்வதற்காக டெல்லியில் 6 வயது சிறுவனை 2 இளைஞர்கள் நரபலி கொடுத்துள்ளனர்.

Advertisment

டெல்லியில் லோதி காலணி பகுதியில் ஆறு வயது சிறுவன் கழுத்தறு பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சிறுவன் கொலைசெய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியில் கட்டிட வேலைபார்க்கும் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இளைஞர்கள் கொலை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை செய்ததில் பணக்காரனாக வாழ கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாகவும் அதனால் சிறுவனை கொன்றதாகவும் கூறியுள்ளனர்.

Youth Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe