ADVERTISEMENT

கோவா மாநிலத்தில் இத்தனை நிறுவனங்களா!

09:35 AM May 07, 2019 | santhoshb@nakk…

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI ACT - 2005) இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை எத்தனை நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளது என்பது தொடர்பான கேள்வியை மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் (Ministry of Corporate Affairs) கேள்வி எழுப்பினோம். அதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 'MCA' அமைச்சகத்தின் அலுவலகத்திற்கு மனுத்தாரருக்கு முழு விவரங்களை அளிக்குமாறு அனைத்து மாநில 'MCA' அமைச்சகத்தின் Division Office -ல் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 'Ministry of Corporate Affairs' உத்தரவிட்டது. இதன் படி கோவா மாநிலத்தில் 2014 முதல் 2019 வரை எத்தனை நிறுவனங்கள் 'MCA' அமைச்சகத்தில் பதிவு செய்தது தொடர்பான விவரங்களை கோவா மாநிலத்தில் உள்ள "REGISTRAR OF COMPANIES CUM OFFICIAL LIQUIDATOR" அதிகாரிகள் அளித்துள்ள பதிலில் கோவா மாநிலத்தில் 2014-2019 ஆம் ஆண்டு வரை சுமார் 1515 நிறுவனங்கள் தொழிற்சாலையை நிறுவி சிறப்பாக நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை வருடங்கள் வாரியாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வருடம் நிறுவனங்களின் எண்ணிக்கை
2014 - 177
2015 - 225
2016 - 305
2017 - 328
2018 - 391
2019 - 89

கோவா மாநிலம் ஒர் சுற்றுலா பயணிகள் நிறைந்த மாநிலம். ஆனால் இந்த மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1515 பன்னாட்டு நிறுவனங்கள் கோவாவில் தொழில் தொடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக இத்தகைய வளர்ச்சிக்கு காரணம் என்னவென்றால் மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரும் , கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர் அவரின் விடா முயற்சி மற்றும் ஆட்சி திறன் உள்ளிட்டவை தான் காரணம் ஆகும். மேலும் கோவா யூனியன் அரசு சுற்றுலாவை நம்பி இருந்த நிலையில் தொழில் துறை நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் . அதே போல் எதிர்காலத்தில் தொழில் துறையில் கோவா மாநிலம் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT