Advertisment

சர்வதேச திரைப்பட விழாவில் கலைஞருக்கு மரியாதை!

barasakthi

Advertisment

இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கோவா சர்வதேச திரைப்படமும் ஒன்று. இந்த விழாவில் பல பன்மொழி படங்கள் உலகெங்கிலும் இருந்து கலந்துகொள்கின்றன. இந்த வருடத்திற்கான கோவா திரைப்பட விழா வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திரப்பட விழா எட்டு நாட்கள் நடைபெறுகின்றது. இந்த முறை நடக்கும் கோவா திரைப்பட விழாவில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞரின் வசனத்தில் வெளியான பராசக்தி படத்தை வெளியிட்டு, அவரை கௌரவிக்க உள்ளனர். அதேபோல மறைந்த திரப்பட நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தையும் இந்த விழாவில் வெளியிட்டு கௌரவிக்கின்றனர். மேலும் சிறந்த இந்திய படங்கள் என்று 22 திரைப்படங்களை விழாக்குழு காட்சியிட உள்ளது. அதில் பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட், பாரம் ஆகிய நான்கு தமிழ் திரைப்படங்களும் தேர்வாகி உள்ளன.

Goa kalaignar
இதையும் படியுங்கள்
Subscribe