ஜிஎஸ்டி கவுன்சிலின் 37- வது கூட்டம் நேற்று (20/09/2019) கோவாவில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முக்கிய வரிக்குறைப்பு குறித்த முடிவுகளை அறிவித்தார். அதில் கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. உலர் புளிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

goa gst council 37th meet gst tax decision union finance minister announced

Advertisment

Advertisment

காபி, டீ உள்ளிட்ட பானங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 28% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பெட்டிகளுக்கான ஜிஎஸ்டி 5% லிருந்து 12% ஆக அதிகரிப்பு. தங்கும் விடுதிகளைப் பொறுத்தவரை ஒர் இரவு தங்குவதற்கான ரூபாய் 1000 அறை கட்டணம் வரை ஜிஎஸ்டி கிடையாது. ரூபாய் 1001 முதல் ரூபாய் 7,500 வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு வரி 18% லிருந்து 12% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் ரூபாய் 7,500- க்கும் அதிகமான கட்டண ரூம்களுக்கான ஜிஎஸ்டி 28%லிருந்து 18% ஆகக் குறைப்பு.

ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் வெள்ளி பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது. இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படாத சில குறிப்பிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முழுவதும் ரத்து. டைமண்ட் ஜாப் ஒர்க் மீதான வரி 5%லிருந்து 1.5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார். அக்டோபர் 1- ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.