/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul-gandhi-manohar-parika-std_0.jpg)
தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை திடீரென அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார். அரசியல் ரீதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் நடந்தகாக கூறப்படும் இந்த சந்திப்பில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள கோவாவின் பாஜக எம்.எல்.ஏ வும், முக்கிய உறுப்பினருமான மைக்கேல் லோபோ கூறும்போது, 'ராகுல் காந்தி ஒரு எளிமையான, நல்ல தலைவர். மனிதநேயம் கொண்டவர். தனிப்பட்ட முறையில் நேற்று முதல்வருடன் நடைபெற்ற சந்திப்பில் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து, விரைவில் குணமடைய வாழ்த்தினார். அவரின் இந்த செயலுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ராகுல் போன்ற தலைவர்கள் எங்கள் கோவா மாநிலத்திற்கும், நம் நாட்டிற்கும் மிகவும் தேவை' என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)