தெலுங்கானாவிலுள்ள ஒருஆலமரத்திற்குமனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதை போல் குளுக்கோஸ் பாட்டில்களில் டியூப் மற்றும் ஊசி மூலமாக பூச்சிமருந்துஏற்றப்பட்டுவருகிறது.
தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரில் 700 ஆண்டுகளுக்கு பழமையான ஆலமரம் ஒன்றுள்ளது, அங்குள்ள மக்களால் இயற்கைநினைவு சின்னமாக இன்றுவரை உள்ள அந்த ஆலமரம் கிட்டத்தட்ட 3 ஏக்கர் அளவிற்கு படர்ந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hgc.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/425452.jpg)
அண்மையில் அந்த மரத்தின் ஒருகிளை பூச்சிகளின் தாக்கத்தால் பாதிப்படைந்தது. இந்த பாதிப்பானதுமரம்முழுவதும் பரவி முழு ஆலமரமும் பட்டுபோகும் நிலையிலுள்ளதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அந்த ஆலமரத்தை அழிவிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை தொடர்ந்து மனிதர்களுக்கு குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றுவதைப்போல, குளுக்கோஸ் பாட்டிலிலுள்ளபூச்சிக்கொல்லி மருந்துகளை ஊசிமூலம் மரத்தில் ஏற்றும் வகையில் மரத்தின் கிளைகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கட்டிதொங்கவிட்டிருக்கின்றனர்.
Follow Us