Skip to main content

மனிதர்களை போல் மரத்திற்கும் குளுக்கோஸ் ஏற்றும் வினோதம்!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

தெலுங்கானாவிலுள்ள ஒரு ஆலமரத்திற்கு மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதை போல் குளுக்கோஸ் பாட்டில்களில் டியூப் மற்றும் ஊசி மூலமாக பூச்சிமருந்து ஏற்றப்பட்டுவருகிறது.

தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரில் 700 ஆண்டுகளுக்கு பழமையான ஆலமரம் ஒன்றுள்ளது, அங்குள்ள மக்களால் இயற்கை நினைவு சின்னமாக இன்றுவரை உள்ள அந்த ஆலமரம் கிட்டத்தட்ட 3 ஏக்கர் அளவிற்கு படர்ந்துள்ளது.

 

TREE

 

 

TREE

 

அண்மையில் அந்த மரத்தின் ஒரு கிளை பூச்சிகளின் தாக்கத்தால் பாதிப்படைந்தது. இந்த பாதிப்பானது மரம்முழுவதும் பரவி முழு ஆலமரமும் பட்டுபோகும் நிலையிலுள்ளதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அந்த ஆலமரத்தை அழிவிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை தொடர்ந்து மனிதர்களுக்கு குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றுவதைப்போல, குளுக்கோஸ் பாட்டிலிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை ஊசிமூலம் மரத்தில் ஏற்றும் வகையில் மரத்தின் கிளைகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கட்டி தொங்கவிட்டிருக்கின்றனர்.    

சார்ந்த செய்திகள்