Advertisment

ஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்... தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்...

புகழ்பெற்ற 'பர்கர் கிங்' கடையில் பர்கர் சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

Advertisment

Glass pieces in burger injures man in Pune

புனே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சஜீத் பதான் அங்குள்ள பர்கர் கிங் கடையில் நண்பர்களுடன் சென்று பர்கர் ஆர்டர் செய்துள்ளார். பர்கர் வந்ததும் அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரது வாய் வழியாக தொடர்ந்து ரத்தம் வந்தபடியே இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவர் சாப்பிட்ட பர்கரை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சாப்பிட்ட பர்கரில் இருந்த கண்ணாடி துண்டுகள் அவரது தொண்டை மற்றும் உணவு குழலை கிழித்து சென்றுள்ளது.

Advertisment

மேலும் சில கண்ணாடி துண்டுகள் அவரது தொண்டைக்குள் சிக்கியிருந்த நிலையில் அவர் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

weird Pune
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe